போடி தேவாரம் பகுதியில் கனமழை..!

 

-MMH

போடி தேவாரம் பகுதியில் வியாழக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருவதால் கொட்டகுடி ஆறு, ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி பகுதியில் கடந்த சில தினங்களாகவே பரவலான மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகலில் மழை இல்லாமல் இருந்தது. புதன்கிழமை இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. வியாழக்கிழமை காலை கனமழை பெய்தது.

தே.ரெங்கநாதபுரம் கன்னிமார் ஓடையில் அதிகரித்த தண்ணீர் .தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிள்ளையார் கோவில் தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குரங்கணி மலை பகுதி, போடி மெட்டு மலைச்சாலை உள்ளிட்ட மலை பகுதியிலும் கன மழை பெய்தது.

தேவாரம் பகுதியில் பெய்த கனமழை தேவாரம் மற்றும் சுற்று கிராமங்களிலும் கனமழையால் பிரம்பு வெட்டி கடை, தே.ரெங்கநாதபுரம் கன்னிமார் ஓடை உள்ளிட்ட ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கண்மாய், குளங்களும் நிரம்ப தொடங்கி உள்ளன.வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் கனமழையால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், பணிகளுக்கு செல்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி. 

Comments