புழுதி பட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு மாவட்டக் கவுன்சிலர் வாழ்த்து!

 

-MMH

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரியில் இடம் பெற்ற கணபதிபட்டி மாணவிக்கு மாவட்ட கவுன்சிலர் நேரில் சென்று வாழ்த்து. சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றிய புழுதிபட்டியில் அரசு மேல்நிலைபள்ளியில் படித்த கணபதிபட்டியைச் சேர்ந்த சின்ன நம்பி எனும் மாணவிக்கு உள் இட ஒதுக்கீட்டின் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில்,

இடம் கிடைத்துள்ளது.மாணவி சின்னநம்பியை மாவட்ட கவுன்சிலர் பொன்.மணி.பாஸ்கர் நேரில் சென்று வாழ்த்திப் பாராட்டினார். மேலும் பொன்னாடை போர்த்தி, இனிப்பு வழங்கி, பட்டுசேலையும் அன்பளிப்பாக வழங்கினார்.

மாவட்ட கவுன்சிலருடன் எஸ்.புதூர் ஒன்றியப் பெருந்தலைவர் விஜயா குமரன், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் KN.கருப்பையா மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுகழக செயலாளர் KM.ராஜமாணிக்கம் ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments