கோவை தெற்கு R.T.O. வில் 8 போடும் பகுதியில் குப்பை குவியல்!!

-MMH

     கோவை மசக்காளிபாளையம் பகுதியிலுள்ள ஜீவி ரெசிடென்சி பகுதியில் ரோட்டில் குப்பை கொட்டுவதால் மக்கள் பெரும் அவதிப் படுகின்றனர். ஜீவி ரெசிடென்சி பகுதியில் கோவை ஆர்டிஓ சார்பாக இங்கு வாகனங்கள் புதுப்பித்தலும் புதியதாக ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வாகனங்களை ஓட்டி காட்டுதல் போன்றவை இங்கு நடைபெறுவதால் தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவ்வாறு அதிக ஆள் நடமாட்டம் உள்ள இப் பகுதியில் அங்கே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில் உள்ள குப்பைகளும் கழிவுகளும் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் ரோட்டில் குப்பை கொட்டுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் நோய்த்தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

-அருண் குமார்,கோவை மேற்கு.


Comments