வழிப்பறி கொள்ளையனை சினிமா பாணியில் விரட்டிபிடித்த காவல் உதவி ஆய்வாளர்!!

 

-MMH

சென்னையில் வழிப்பறி கொள்ளையனை சினிமா பாணியில் விரட்டிபிடித்த காவல் உதவி ஆய்வாளர். சென்னை மாதவரத்தில் வழிப்பறி கொள்ளையனை சினிமா பாணியில் உதவி ஆய்வாளர் விரட்டிபிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ரவி என்பவரின் செல்போனை வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் நேற்று பறித்து சென்றனர்.

இதைக் கண்ட உதவி ஆய்வாளர் ஆல்வின் ரமேஷ், மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கினார். 2 பேரில் ஒருவன் தப்பியோடிவிட, இன்னொருவன் சிக்கினான். விசாரணையில் பெயர் அருண் என்பதும், சேப்பாக்க லாட்ஜில் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி கைவரிசையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவனையும், மேலும் 3 பேரையும் கைது செய்து, 1 மோட்டார் சைக்கிள், 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளையனை உதவி ஆய்வாளர் பிடித்த வீடியோவை டுவிட்டரில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட, வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ருக்மாங்கதன் சென்னை.


Comments