போதை பயன்பாடு மூளைக்கு நச்சுத்தன்மை!! அப்படியா...!

-MMH

போதை மருந்துகளின் பயன்பாடு மூளைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அதனை அறவே தவிர்க்க வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாதவர்கள் மருத்துவ நிபுணர்களின் உதவியை நாட வேண்டும். ஆல்கஹால் மூளைக்கு நச்சுத்தன்மை விளைவிக்கக்கூடியது. அதை அதிகமாக உட்கொள்வது மூளை செல்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

தினமும் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். அவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கு வழிவகை செய்யும். முதுமையை தடுப்பதற்கான சிறந்த வழிகளில் இதுவும் ஒன்றாகும். நினைவாற்றல் இழப்புக்கு மன அழுத்தம் முக்கிய காரணங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. மூளைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

-ஸ்டார் வெங்கட்.         

Comments