தஞ்சாவூர் எம்எல்ஏ திடீர் சாலை மறியல்!!

 

     -MMH                                                                                 
 தஞ்சாவூர் சட்டமன்றத்  தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவை சேர்ந்த திரு  டி.கே.ஜி நீலமேகம் அவர்கள். தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் உள்ள கொண்டி ராஜபாளையத்தில் திடீரென்று   தனது கட்சியினருடன்  சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவரது கட்சியினரும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர். அவர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சாலை மறியல் செய்தார் . 10 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட பாதாள சாக்கடை இன்னும் சரிவர செயல்படுத்தப்படவில்லை  என்பதை கண்டித்தும் ஒரு வாரமாக மழை பெய்து மழைநீர் சாக்கடை நீர் எல்லாம் ஒன்றாக கலந்து தொற்றுநோய் பரவ காரணமாக அமைகின்றன என்பதை கண்டித்தும்  மாநகராட்சி நிர்வாகம் சரிவர செயல்படாத காரணத்தினால் சாலைமறியல் செய்வதாக கூறினார்கள்,  பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் ,  மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைவில் சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர்,அதன் முடிவில் அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments