நாய் கடித்தால் என்ன செய்யவேண்டும்..!


   -MMH 

நாம் இந்த செய்தித் தொகுப்பில் நாய் கடித்தாலும், காயம் ஏற்படுத்தினாலும் உடனே செய்ய வேண்டிய முதலுதவி என்ன என்பது பற்றி பார்ப்போம்.நாய்க்கடிபின் ஆழமான காயம் என்றால் சுத்தமான துணியால் லேசாக அழுத்திப் பிடித்து ரத்தம் வெளியேறுவதை முதலில் தடுக்க வேண்டும். அப்படி தடுக்கவில்லை என்றால் ரத்தம் அதிகமாக வீணாகும்.பிறகு இரத்தம் நின்ற பிறகு சுத்தமான துணியை எடுத்துக் கொண்டு நன்றாக அந்த காயத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

அவ்வாறு சுத்தம் செய்யாமல் காயம் அடைபட்ட நிலையில் இருந்தால் அதில் கிருமிகள் பெருகி கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் அந்த காயத்தை துணியால் கட்டவே கூடாது.அதன் பிறகு முதலுதவி செய்த பிறகு அதற்குரிய மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது நல்லது. சிறிய காயம் என்றாலும் அந்த இடத்தில் நிறைய தண்ணீர் விட்டு கழுவி ஆன்டிசெப்டிக் க்ரீம் பூச வேண்டும்.

-ஸ்டார் வெங்கட்.   

Comments