நாடோடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த சிங்கம்புணரி சேவுகா அரிமா சங்கம்!!

  -MMH

     சிங்கம்புணரி: நவ - 26

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் 26 நாடோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 குழந்தைகள் உட்பட 80 பேர் ஒரு கண்மாயில் தற்காலிக குடியிருப்புகளை ஏற்படுத்தி வசித்து வந்தனர். சிங்கம்புணரி பகுதியில் நிலவும் தொடர் மழையின் காரணமாக அவர்களைப் பாதுகாக்க சிங்கம்புணரி சேவுகா அரிமா சங்கம், அவர்களை வாகனங்களில் ஏற்றி சேவுகப் பெருமாள் கோவில் அருகில் உள்ள வள்ளலார் மடத்தில் தங்க வைத்தனர்.

அவர்களுக்குத் வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் போர்வை, படுக்கை விரிப்புகள், முகக் கவசம் போன்றவை சிங்கம்புணரி சேவுகா லயன்ஸ் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இரவு உணவு 80 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி, வட்டாட்சியர் திருநாவுக்கரசு, சேவுகா அரிமா சங்க தலைவர் செல்வகுமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

- பாருக்,சிவகங்கை.

Comments