நிவர் புயல் எதிரொலியாக புதுக்கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்....!

-MMH

நிவர் புயல் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. முற்றிலும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்ற கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மக்கள் இம்முறை புயலுக்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வீடுகளின் அருகாமையில் அமைந்துள்ள மரக்கிளைகளை வெட்டியும், அத்தியாவசிய பொருட்களான பால் மளிகை பொருட்கள் காய்கறிகள் முதலியவற்றை வாங்க காலை முதல் மக்கள் திரளாக மார்கெட் பகுதிகளுக்கு படை எடுத்து சென்றனர்.

அதனால் மதியம் காய்கறிகள் முற்றிலும் விற்று தீர்ந்தன. காய்கறி தட்டுப்பாடு நிலவியது . கடைகளில் மெழுகுவர்த்தி, கொசுவத்தி, போன்றவை விற்று தீர்ந்தன கஜா புயல் கற்றுக்கொடுத்த பாடத்தால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மும்முரமாக களமிறங்கி வருகின்றனர்.

சாலையோர வியாபாரிகள் தங்களின் கடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் அலுவலகங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்களில் பணிபுரிவோர்கள் மதியம் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.

மற்ற அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கியது . அரசு அமைத்துள்ள பேரிடர் மீட்பு குழுவும் மற்றும் தன்னார்வலர்களும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர் ஆனால் இதுவரை (மாலை7.00மணி) புதுக்கோட்டை பகுதியில் மழை எதுவும் பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,          

 - ப.கோபிநாத்,புதுக்கோட்டை.

Comments