முக்கனி மனித நேய அறக்கட்டளை சார்பில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டது!

 

-MMH

முக்கனி மனித நேய அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர்க்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.கோவை குனியமுத்தூர் பகுதியில் முக்கனி மனித நேய அறக்கட்டளையின் 8வது ஆண்டு விழா மற்றும் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.இதில் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர்க்கு உதவி பொருட்கள், மற்றும் இளம் தேசப்பற்று நற்சான்றிதழ்கள் விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் முக்கிய அம்சமாக தேசம் காப்போம் எனும் தலைப்பில்,தேச பற்று, தேச அமைதி, தேச ஒருமைப்பாடு உள்ளிட்டவைகளில் கட்டுரை, கவிதை, ஓவியம் வரையும் போட்டிகள் நடைபெற்று. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து  சிறுவர் சிறுமியர்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராஜ்குமார், குமார்,  நிவேதா,சாஜு இஸ்மாயில் உள்ளிட்ட முக்கனி மனிதநேய அறக்கட்டளையினர் நிர்வாகிகள், பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி போத்தனூர்.

Comments