கொப்பரை ஏலத்தில் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

  -MMH

      பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் நேற்று கொப்பரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 210 முதல் தர  மூட்டைகள் கிலோவுக்கு113.35 ரூபாய் முதல் 123.45 ரூபாய் வரை ஏலம் போனது இரண்டாம் தர 180 மூட்டைகள் கிலோவுக்கு 71.45 ரூபாய் முதல் 98.80 ரூபாய் வரை ஏலம் போனது மொத்தம் 390 மூட்டைகளை 78 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். 11 வியாபாரிகள் பங்கெடுத்தனர் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் 5.86 ரூபாய் அதிகரித்துள்ளது கொப்பரைக்கு விலை உயர்ந்து வருவதால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.

Comments