எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி நிலையங்கள் பெட்ரோல் பங்க்குகளில் விற்க திட்டம்!!

     -MMH

கோவை:எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் நிலையங்கள், பெட்ரோல் பங்க்குகளில் துவங்கப்படவுள்ளன.சுற்றுசூழல் மாசு, எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இருந்தும், மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பாமல் இருக்க, பேட்டரி சார்ஜிங் மையங்கள் பெரியளவில் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதே காரணம்.இந்த நிலையை மாற்றும் வகையில், பெட்ரோல் பங்க்குகளில் பேட்டரி சார்ஜிங் நிலையங்களை துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சிலர் கூறுகையில், 'நாடு முழுவதுமுள்ள, 69 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளில், தலா ஒரு இ-சார்ஜிங் கருவியை நிறுவ இருப்பதாக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை பெட்ரோல் பங்க்குகளிலும், தலா ஒரு இ-சார்ஜிங் கருவி நிறுவப்படும்' என்றனர். 

-சுரேந்தர்.

Comments