பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மாயம்!! - பதட்டத்தில் மக்கள்!!

 

  -MMH

     பொள்ளாச்சி வடுகுபாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் இவருடைய மகள் பிரியதர்ஷினி வயது பத்தொன்பது இவர் மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் சிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் பி காம் மூன்றாம் ஆண்டு  படித்து வந்த ரம்யா என்ற பெண் மாயமாகி விட்டாள்  என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மாயமாகி வருவதால் பொள்ளாச்சி மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு. 

Comments