அரசு ஊழியர் சங்கத்தினர் மடத்துக்குளத்தில் ஆர்ப்பாட்டம்!!!
மடத்துக்குளம்:மடத்துக்குளத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டக்கிளை தலைவர் மதன்குமார் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர், எம்.ஆர்.பி. செவிலியர் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
ராணுவ தளவாட தொழிற்சாலை, ரயில்வே, இன்ஷூரன்ஸ், வங்கி, தொலைதொடர்பு துறை, துறைமுகம், விமானம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
நாளையவரலாறு செய்திக்காக,
-ஹ.மு.முஹம்மதுஹனீப், திருப்பூர்.
Comments