குடும்ப வன்முறையைத் தடுக்க விழிப்புண்ர்வு பிரசாரம்..!

 

-MMH

தேனி மாவட்டம், கூடலூரில் குடும்ப வன்முறையைத் தடுக்க, தமிழ் மாநிலப் பெண்கள் இயக்கம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட தமிழ் மாநிலப் பெண்கள் இயக்கம் சாா்பில், குடும்ப வன்முறையைத் தடுக்கவும், பாதுகாப்பான குடும்பங்களை உருவாக்கவும், பெண்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேன் பிரசாரம் நடத்தப்பட்டது. கூடலூா் காவல் நிலைய ஆய்வாளா் கே. முத்துமணி பிரசார பயணத்தை தொடக்கிவைத்தாா்.

இந்த வேன் பிரசாரத்தின் மூலம், அரசமரம், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், காமாட்சியம்மன் கோயில், கன்னிகாளிபுரம், கே.கே.நகா், எம்.ஜி.ஆா்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சின்னமனூா் எழுச்சி பெண்கள் கூட்டமைப்பினா் செய்திருந்தனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி. 

Comments