பெரியார் சிலையை உடைப்பேன் பாரத் முன்னணி நிர்வாகி கைது...!

-MMH

பெரியார் சிலையை உடைப்பேன் என வாட்ஸ் அப்பில் பதிவிட்ட பாரத் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது. கோவை, நவம்பர். 26- வாட்ஸ் ஆப்பில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்ட பாரத் முன்னணி அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கள்ளப்பாளையம் கிழக்குத் தெரு பகுதியில் வசிப்பவர் பிரபு (வயது 40), இவருடைய வாட்ஸ் அப்பிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் பெரியார் சிலையை உடைப்பேன் என அதில் குறிப்பிட்டிருந்தது. 

அவர் யார் என்று விசாரித்தபோது, கோவை கள்ளப்பாளையம் வ.உ.சி தெருவில் வசிக்கக்கூடிய மனோகரன் (வயது 40), என்பது தெரியவந்தது. இவர் பாரத் முன்னணி அமைப்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். 

இதனைதொடர்ந்து வாட்ஸ்அப் தகவலை எடுத்துக்கொண்டு பிரபு செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 294b, 323, 506 (1) ஆகிய பிரிவின் கீழ் பாரத் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மனோகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.            

-சீனி போத்தனூர்.  

Comments