குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்குச் சென்றபோது விபத்து! சிங்கம்புணரி அருகே சோகம்!

-MMH

சிங்கம்புணரியை அடுத்த கல்லம்பட்டி புதுப்பட்டியிலிருந்து இன்று காலை ஒரு சரக்கு வாகனத்தில் 9 பேர் தெக்கூருக்கு குலதெய்வம் கோவிலுக்கு வழிபாட்டிற்குச் சென்றனர். வழிபாடு முடித்து விட்டு ஊருக்குத் திரும்புகையில் மருதிப்பட்டியை அடுத்து ஒரு அபாயகரமான வளைவில் ஓட்டுனரின் கவனக்குறைவால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த பனை மரத்தின் மீது மோதியதில் ஆறுமுகம் என்பவரின் மகன் ஆனந்த்(2௦) எனும் சிறுவன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான்.

பெண்கள் உட்பட மீதமுள்ள எட்டுப் பேரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். சிறுவன் ஆனந்த் விபத்தில் மரணமடைந்தது, கல்லம்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சரக்கு வாகனங்களில் பயணிக்கக்கூடாது என அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி, அது சம்பந்தமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவுகள் இட்டாலும் பொதுமக்கள் விதிகளை மீறிப் பயணித்து விபத்துகளில் சிக்குவது தொடர்கதை ஆகியுள்ளது வருந்தத்தக்கது.

-பாரூக் சிவகங்கை.            

Comments