நிவர் பராக்! எதிர்கொள்ள தமிழகம் தயார்! உதவிஎண்கள் உள்ளே!

 

-MMH



அந்தமான் & சுமித்ரா தீவுகளிடையே உருவாகியுள்ளப் புயல் 90km வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இது தமிழகம் & புதுவை நோக்கி கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் சுற்றறளவில் பெரியது என்பதால், அனைத்து இடங்களிலும் (சென்னை முதல் கன்னியாகுமரி வரை) அதிக மழை பொழியும்.

நவம்பர் 24,25,26,27 தேதிகளில் தமிழகம்  முழுவதும் மற்றும் புதுவையிலும் கனமழை அல்லது மிக கனமழை பொழியும்.

இந்தப் புயலானது நவம்பர் 25 மாலை முதல் நவம்பர் 26 காலை வரை (140km  வேகத்துக்கு மேல்)  டெல்டா மாவட்டங்கள் வழியாக (நாகப்பட்டிணம், புதுக்கோட்டை, திருச்சி,  தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,  காரைக்கால்) கடலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி,  கோவை ஆகிய மாவட்டங்களைக் கடந்து கேரள மாநிலம் வழியே அரபிக்கடல் சென்றடையும்.

புயல் கரையை நெருங்கும் பொழுதும் & கடக்கும் பொழுதும், காற்றுடன் கனமழை பொழியும்.

பாதுகாப்புப் பணிக்காக 42000 பேரிடர் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் இந்த நாட்களில், பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப் படும்.

மழையும், புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ளவும்.

முன் எச்சரிக்கையோடு மிகக் கவனமாக பாதுகாப்போடு இருப்போம்.

புயல் எதிரொலியாக, கடலூர் மாவட்ட பொது மக்களுக்கு உதவி எண்கள் :

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 04142 - 220700 / 233933 / 221383 / 221113*

வருவாய்த்துறை அலுவலகம் 04142 - 231284*

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் 04144 -222256 / 290037*

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் 04143 - 260248*

மாவட்ட உதவி எண் 1077*

மாநில உதவி எண் 1070.*

வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை எண் 1077*

காவல் துறை எண் 100*

தீயணைப்பு மற்றும் மீட்பு துறை எண் 101*

விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி)    எண் 108*

மருத்துவ உதவி அழைப்பு எண் 104*

குடிநீர் பிரச்சனை     தீர்வுக்கான எண் 1800 425 1941*

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments