நடைபயிற்சிக்கு சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு!!

    -MMH 

     நடைபயிற்சிக்கு சென்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியில் சாலையில் அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதாக தெரிகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த முதியவர் யார் என்பது தெரியாததால் போத்தனூர் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்தில் உயிரிழந்த முதியவரை குறித்து அக்கம் பக்கம் இருப்போரிடம் விசாரணை மேற்கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லாத காரணத்தினாலும் அருகிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதன் பிறகுதான் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த நபர் குறித்தும் விபரங்கள் தெரியவரும் என விபத்து பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த விபத்தில் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதி மக்களிடம் விபத்தில் இறந்தவர் குறித்து போத்தனூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

-சீனி,போத்தனூர்.

Comments