தோண்டப்படும் குழிகள் சரிவர மூடப்படாத நிலை!!

 -MMH 

     கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் தோண்டப்படும் குழிகளால் அங்கு உள்ள கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தள்ளாடி குழியில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.  கேபிள் போடுவதற்காக தோண்டப்படும் குழிகளை மாநகராட்சி நிர்வாகம் சரிவர மூடவில்லை என்று அங்குள்ள வியாபாரிகளும், பொதுமக்களும்‌ தெரிவிக்கிறார்கள். 

பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அந்த குழிகளில் விழும் ஆபத்து இருப்பதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments