முக கவசம் இல்லாமல் பயணிக்கும் பேருந்து பயணிகள்..!

 

-MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் பேருந்தில் பயணம் செல்வோர் முககவசம் அணியாமல் பயணம். தமிழகத்தில் அரசு ஆணை படி கொரோனோ நோய் தொற்றின் காரணமாக சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் அணிய வேண்டும் என அரசு கூறியது. ஆனால் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் கோவை திருப்பூர் பழனி ஆகிய பேருந்துகளில் முககவசம் அணியாமல் ஒரு சிலர் பயணம் செய்வது நாம் காணமுடிகிறது.

அரசின் சுகாதர துறை கூறியதை கேட்காமல் இப்படி நடக்கும் பட்சத்தில் இன்னும் நோய் தொற்று அதிகம் ஆகும் என்பதில் இந்த பயணிகளே சாட்சி. நோய்த்தொற்றை குறைக்க கூறும் அறிவுரைகளை கேட்போம் நம்மை நாமே பாதுகாப்போம் கொடிய கொரோனோவில் இருந்து.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments