நெசவாளா்களின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி மனு!!

  -MMH

     திருப்பூர்: நெசவாளா்கள் வங்கியில் வாங்கிய அனைத்து விதமான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய தேவாங்கா் ஸ்ரீ செளடேஸ்வரி நற்பணி மன்றத்தின் நெசவாளா் அணி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அணி சாா்பில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில்  அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: "கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, நெசவாளா்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.24 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். விவசாயத்துக்கு வழங்குவதைப் போல நெசவுத் தொழிலுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும். நெசவாளா்கள் வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்துவிதமான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கைத்தறி நெசவுத் தொழில் செய்யும் அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் துணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கினால் மட்டுமே ஜவுளிகளின் தேவை அதிகரிப்பதுடன், நெசவுத் தொழில் சீரடையும். ஆகவே, ஜவுளி ரகங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். விவசாயிகளைப்போல நெசவாளா்களுக்கும் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையவரலாறு செய்திக்காக, 

-முஹம்மதுஹனீப், திருப்பூர்.

Comments