எரியும் ஆனா எரியாது..!

  -MMH 

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க அரசு மேம்பாலம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

கிணத்துக்கடவு மேம்பாலத்தில் 30 க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் எரிவதில்லை என நம் நாளைய வரலாறு செய்தியில் இட்டிருந்தோம். செய்தியின் எதிர் ஒளியாய் நடவடிக்கை எடுத்து  மின் விளக்குகள் சரி செய்யப்பட்டு மக்கள் பயனடையும் வகைள் வெளிச்சம் கிடைத்தது.

இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் அதாவது மேம்பாலம் முடிவடையும் இடத்தில் 20 இக்கும் மேற்பட்ட விளக்குகள் இருந்தும் அனைத்து வைக்கப்பட்டு உள்ளது நாம் வாகனத்தில் செல்லும்போது காண முடிகிறது.

மின்விளக்குகள் அரசின் பல கோடி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி செய்யப்பட்ட நிலையில் வெளிச்சம் இல்லாமல் 20 இக்கு மேல் விளக்குகள் அனைத்து வைக்கப்பட்டு உள்ளது வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பாக உள்ளது என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன்,

பொள்ளாச்சி கிழக்கு.

Comments