வெள்ளியங்குடிப்பட்டியில் இருசக்கர வாகனங்கள் மோதல்!! - விபத்தில் ஒருவர் பலி!!

     -MMH 

பொன்னமராவதி சேர்ந்த ராமசாமி மகன் கணேசன்(55) என்பவர் பிரான்பட்டியில் நண்பரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பொன்னமராவதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெள்ளியங்குடிப்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த அழகேசன் மகன் அருண்குமார் (24) என்பவர், கணேசன் வந்த வாகனத்தில் நேருக்கு நேர் மோதியதில் கணேசன், சம்பவ இடத்திலேயே தலைக் காயம் காரணமாக இறந்தார்.

உலகம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிய அரசும், காவல்துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் அலட்சியம் காரணமாக விபத்தில் ஒரு மரணம் நேர்ந்திருக்கிறது.

-பாரூக்,சிவகங்கை.

Comments