உத்தமபாளையத்தில் சுகாதார வளாகங்களை திறக்கக் கோரிக்கை...!

 

-MMH

உத்தமபாளையம் பேரூராட்சியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இங்குள்ள பேருந்து நிலையம், புறவழிச்சாலை பகுதிகளில் சுகாதார வளாகமின்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.

 இதனையடுத்து, உத்தமபாளையம் பேரூராட்சி நிா்வாகம், பேருந்து நிலையத்தில் ஆண்களுக்கான சுகாதார வளாகத்தையும், புறவழிச்சாலை பேருந்த நிறுத்தத்தில் பொது சுகாதார வளாகத்தையும் கட்டியது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே இவை உள்ளன. இதனால் வெளியூா் சென்று திரும்பும் பயணிகள் சுகாதார வளாகமின்றி அவதிப்படுகின்றனா். பலா் திறந்த வெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டநிா்வாகம் இந்த சுகாதார வளாகங்களை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments