அசத்தும் அரசு பஸ் ஊழியர்கள் பாராட்டும் பயணிகள்!!

 

  -MMH

     தமிழ்நாடு அரசு பேருந்து என்றாலே குப்பை கூளமாக இருக்கும் என்று ஒரு கருத்து இருக்கிறது. அதைப் போக்கும் வகையில் மதுரையிலிருந்து வாடிப்பட்டி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், வழியாக கோயமுத்தூர் வரை செல்லும் அரசு பேருந்தில் அசத்தும்  ஊழியர்கள்.

வரும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணத்தை எடுத்துக்கூறியும், ஒழுங்குமுறை செய்து அமர வைக்கும் வகையிலும் தலை சுற்றுதல், வாமிட்டிங் போன்ற நிகழ்வுகளுக்கும் கவர் கொடுத்தும் குப்பைகளையும் ஒரு கவரில் போட வேண்டும் என்றும் அறிவுறுத்திவரும் பஸ்  டிரைவர் மகேந்திரன், நடத்துனர் சிவசண்முகம். இருவரும் பயணிகளுக்கு பேருந்தை சுத்தமாக வைப்பதற்கு அறிவுரை கூறி அசத்தி வருகிறார்கள்.

தமிழக அரசு புது பேருந்து வழங்கியதால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பேருந்து நடத்துனரும் ஓட்டுனரும் இவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.

-ஈஷா,கோவை.

Comments