பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்...!!

 

-MMH

சென்னை. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நாடு முழுவதும் பள்ளி-கல்லூரிகளை மூட கடந்த மார்ச் 16-ந்தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அதேநேரம் புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்று பரவிய தகவல் தவறானது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் மேலும் அவர் பாடத்திட்டங்கள் குறைப்பது குறித்து முதல்வரிடம் நாளை மறுநாள் அறிக்கை தரப்படும் என்றும் அதன் பின் ஐந்து நாளில் பாடத்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதே போல், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அந்தந்த பள்ளி ஆசிரியர்கள், அவரவர் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு முடிந்தவுடன், அவர்களைப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.

-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments