பொள்ளாச்சியில் அதிக அளவில் தென்படும் ஆவாரம்பூ..!!

 

-MMH

பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக காணப்படும் ஆவாரம்பூ செடிகள்.ஆவாரம்பூ செடிகள் சீசன் தற்போது அதிகரித்து உள்ளது.மருத்துவ குணம் வாய்ந்த இந்த செடியின் பயன்களை பார்க்கலாம். ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.

1. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. 

2.இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. 

3.மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

4.நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

5.இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போவக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.

6.நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.

7.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.

8.பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

9.இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

இலவசமாக  நமக்கு கிடைக்கும் இந்த ஆவாரம்பூ சேகரித்து பயன்படுத்தி கொள்வோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments