வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தப்பட்டது!! - நாளைய வரலாறு செய்தி எதிரொலி!!

     -MMH


     பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த வளர்ந்தாயமரம்  
RTO போக்குவரத்து சோதனைச் சாவடி அலுவலகம் முன்பு இடையூறாக இருந்த மரத்தை வெட்டினார்கள். ஆனால் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தாமல் அலுவலகத்திற்கு இடையூறாக இருந்து வந்தது இதுகுறித்து கடந்த 30 ஆம் தேதி நமது நாளைய வரலாறு online  செய்தியில் சுட்டிக் காட்டி இருந்தோம்.இச் செய்தியின் எதிரொலியாக அந்த பகுதியில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் அலுவலகத்திற்கு இடையூறாக இருக்கும் மரத்தின் அடிப்பகுதியை எப்போது எடுப்பார்கள் என்ற கேள்வி இப்பகுதியில் உள்ள பொதுமக்களுடன் எழுகிறது.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments