ஆர்கிட் ஆராய்ச்சி மையம் அட்டகட்டியில் அமைப்பு..!!

     -MMH


      சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அட்டகட்டியில் வனத்துறை சார்பில் ஆர்கிட் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட பகுதியில் வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களில் அரிய வகை தாவரங்கள், பூக்கள்,செடிகள் அமைந்துள்ளன. வனவிலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் தாவரங்களை வகைப்படுத்தி, சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் அட்டகட்டியில் ஆர்கிட் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


     இது குறித்து அட்டகட்டி உதவி வனப்பாதுகாவலர் செல்வம் கூறியதாவது:"ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அரிய வகை தாவரங்கள், பூக்களை சேகரித்து ஆர்கிட் ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 140 வகையான தாவரங்களை வகைப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனங்களில் இயற்கையாக காணப்படும் தாவரங்கள் பாறை இடுக்கிகளில் வளரும் தாவரங்கள் என இரு வகைப்படுத்தி அவற்றை சேகரித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். இந்த ஆர்கிட் ஸ்டேடியத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சியாளர்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் தற்காலிகமாக பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.


-கிரி,கோவை மாவட்டம். 


Comments