வால்பாறை பகுதிக்கு தரமான மருத்துவமனை வேண்டும்!! - பொதுமக்கள் கோரிக்கை!!

     -MMH


     பொள்ளாச்சி வால்பாறையில் தரமான ஒரு மருத்துவமனை இல்லை. உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவமனை சென்றால் உடனடியாக பொள்ளாச்சி அல்லது கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கற்பினி பெண்கள் கூட தங்கள் உடலினை ஸ்கேன் செய்வதற்கான கருவி இங்கில்லாததால் பொள்ளாச்சிக்கு சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். இதுதான் எங்கள் நிலைமை இதுதான் எங்கள் வாழ்க்கை என்கிறார்கள் வால்பாறை மக்கள் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து வால்பாறை பகுதிக்கு தரமான மருத்துவமனை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமா,கோவை தெற்கு.


Comments