மத்திய அரசு அதிரடி... அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம்... எப்போதில் இருந்து தெரியுமா...!

      -MMH


அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி செல்வதால், சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு நேர விரயத்துடன், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்கும் வகையில் பாஸ்ட்டேக் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.


டோல்கேட்டில் உள்ள கருவிகள் 'ரீட்' செய்து, உங்கள் வருகையை பதிவு செய்யும். அதன்பின் உங்கள் பாஸ்ட்டேக் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணக்கில் இருந்து, டோல்கேட் கட்டணம் எடுத்து கொள்ளும். இதற்கு செல்போன் போல் நீங்கள் தேவைப்படும் சமயங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ள மத்திய அரசு அதிரடி... 


அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


டோல்கேட்களில் வாகனங்கள் கட்டணத்தை ரொக்கமாக செலுத்தி செல்வதால், சில சமயங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு நேர விரயத்துடன், எரிபொருள் விரயமும் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்க்கும் வகையில் பாஸ்ட்டேக் நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது.



வாகனங்களின் முன் பக்க விண்டு ஸ்க்ரீனில் ஒட்டப்பட்டிருக்கும் பாஸ்ட்டேக் அட்டையை, டோல்கேட்டில் உள்ள கருவிகள் 'ரீட்' செய்து, உங்கள் வருகையை பதிவு செய்யும். அதன்பின் உங்கள் பாஸ்ட்டேக் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கணக்கில் இருந்து, டோல்கேட் கட்டணம் எடுத்து கொள்ளும். இதற்கு செல்போன் போல் நீங்கள் தேவைப்படும் சமயங்களில் ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.


ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!


பாஸ்ட்டேக் முறையின் மூலம் டோல்கேட்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்படும். இதன் மூலம் வாகன உரிமையாளர்களின் நேரம் மிச்சமாவதுடன், எரிபொருளும் சேமிக்கப்படும். அத்துடன் கட்டண ரசீது வழங்க தேவை இல்லாததால், காகித பயன்பாடும் குறைக்கப்படும். எனவே பாஸ்ட்டேக் மூலம் சுற்றுச்சூழலுக்கும் நன்மை ஏற்படும்


இந்த சூழலில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல், டோல்கேட்களை கடக்கும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பது பின்வருமாறு:
2017ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட 'எம்' மற்றும் 'என்' பிரிவை சேர்ந்த அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்ட்டேக் கட்டாயம். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன்படி, புதிய நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யும்போதே பாஸ்ட்டேக் எண்ணை வழங்குவதும் கட்டாயம்.


அத்துடன் நான்கு சக்கர வாகனங்களுக்கான தகுதிச்சான்று பெறுவதற்கும் பாஸ்ட்டேக் கட்டாயம். பாஸ்ட்டேக் உள்ள வாகனங்களுக்கு மட்டும்தான் தகுதிச்சான்று வழங்கப்படும். அதேபோல் நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு எடுப்பதற்கும் பாஸ்ட்டேக் கட்டாயம். மூன்றாம் நபர் காப்பீட்டை எடுக்கும்போது, பாஸ்ட்டேக் எண்ணை கண்டிப்பாக வழங்க வேண்டும்


நான்கு சக்கர வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு எடுக்கும்போது பாஸ்ட்டேக் கட்டாயம் என்ற நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால், பாஸ்ட்டேக் கட்டண பரிவர்த்தனைகள் அனைத்தும் இனி டிஜிட்டல்மயமாகும்.


அத்துடன் டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்பதால், வாகன உரிமையாளர்களுக்கு நேரமும், எரிபொருளும் மிச்சமாகும். ஆனால் கணக்கில் இருந்து கட்டணத்தை காட்டிலும் அதிக தொகை பிடித்தம் என்பது உள்பட பாஸ்ட்டேக்கில் அவ்வப்போது ஒரு சில குளறுபடிகள் நடந்து வருவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். அவற்றை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக 


-V.ருக்மாங்கதன் சென்னை.


Comments