அனுமதியின்றி மரம் வெட்டிய விவகாரம்!! - பொள்ளாச்சி மக்கள் சோகம்!!

     -MMH 


     பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை 'ஆலம் விழுது குழுவின்' சார்பாக  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெற்றிகரமாக  67ஆவது வாரத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இவர்களுடைய இந்த நற்செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் உதவிகளையும் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று முன்தினம் ஆனைமலை ஈஸ்வரன் கோவில் அருகில் இருந்த மலை வேம்பு மரத்தையும், அருகிலிருந்த புங்கண் மர வாதுகளையும் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் வெட்டினார். எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பொது இடத்தில் இருந்த மரத்தை வெட்டியது மிகுந்த வேதனை அளிப்பதாக ஆலம் விழுது குழுவினர் தெரிவித்தனர். மேலும் பொது இடங்களில் இருக்கும் மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.



மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற சிந்தனையோடு, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments