பெண் நிருபரின் துணிச்சல்..!

      -MMH


17-11-2020-சிறப்பு செய்தி.


சத்தியம் நியூஸ் சேனல் இன் பெண் நிருபர் ஒருவர் துணிவுடன் வெள்ள சேதங்களை விளக்கமாக செய்தி தரும் நேரத்தில் அந்தப் பாலம் இடிந்து விழும் காட்சி யூடியூப் சேனலில் வைரல் ஆகியது. சத்தியம் சேனல் நிருபர்  வெள்ள சேதங்களை விளக்கி பேசிக்கொண்டிருக்கும் பொழுது  கேமராமேன் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது  இந்தப் பாலம் திடீரென்று இடிந்து விழுகிறது.பெண் நிருபரும் கொஞ்சம் கூட பதறாமல் செய்திகளை தொடர்ந்து தந்த வண்ணம் உள்ளார் அவரது இந்த துணிச்சலான செயல் அனைவருடைய பாராட்டையும்  பெற்றள்ளது . தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடும் இந்நாளில் பத்திரிக்கையாளர் ஒருவர் துணிச்சலாக  இந்தக் காட்சியை பதிவு செய்ததற்காக நாம் அனைவரும் பாராட்டுவோம்.


ஒரு பத்திரிக்கையாளர் என்பவர் ஒரு சரித்திரத்தையே மாற்றக்கூடிய அதிகாரம் படைத்தவர், அவருடைய பேனா முனை கத்தி முனையை விட மிகவும் கூர்மையானது என்பது  அனைவரும் அறிந்தது, உண்மையை உரக்கச் சொல்வதில் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன,  எத்தனையோ வழக்குகளில் ஊடகங்கள்   உண்மையை ,நீதியை வெளிக்கொண்டுவர உதவியுள்ளன  அத்தகைய ஊடகவியலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளனரா பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறிதான்.


இந்தியாவில் பத்திரிக்கை ஊடக சுதந்திரம் மிக மோசமாக உள்ளதாக சர்வதேச பத்திரிகை சுதந்திரம் குறித்து கண்காணிக்கும்  அமைப்புகள் உறுதி செய்துள்ளன. அதற்கு சான்றாக சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய நல்லூர் கிராமத்தை சேர்ந்த ஊடகவியலாளர் மோசஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் மோசஸ் தொடர்ந்து  கஞ்சா விற்பவர்களை  பற்றிய தகவல்களையும்  நிலம் அபகரிப்பவர்களை  பற்றியும்  காவல்துறைக்கு தெரியப்படுத்தியுள்ளார், அதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இது ஊடக சுதந்திரத்திற்கு சவால்விடும் ஒரு செயலாக பார்க்கப்படுகிறது, ஒருபுறம் ஊடகவியலாளர்களை பாராட்டும் சமூகம்! மற்றொருபுறம் ஊடகவியலாளர்களை தாக்கக்கூடிய ஒரு சமூக விரோதக் கூட்டம்,!  காக்கப்படுமா ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு...?. ''நாளைய வரலாறு புலனாய்வு இதழின் சார்பாக சகோதரிக்கு பாராட்டுகள்''


நாளைய வரலாறு செய்திக்காக


-ராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments