காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு!! - வீணாக வெளியேறிய  லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர்!!

     -MMH


     மணப்பாறை - நவ:3


     காவிரி கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு.வீணாக வெளியேறிய லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர்!


மணப்பாறை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக வெளியேறியது.


திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய இரண்டு தாலுகா பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றி வருவது காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்தான். கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பிரமாண்ட குழாய் மூலம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகின்றது.


இந்நிலையில் கலிங்கபட்டி என்ற இடத்தில் உள்ள காவிரி குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து வெளியேறியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக வெளியேறியதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


இதையடுத்து மின்மோட்டார் நிறுத்தப்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுவதும் நிறுத்தப்பட்டது. இருப்பினும் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாக வெளியேறி குளம் போல் தேங்கி நின்றது.


மணப்பாறை பகுதியில் ஏற்கனவே கடும் வறட்சி நிலவி வரும் சூழ்நிலையில் மக்கள் தாகத்திற்கு கூட தண்ணீர் இன்றி தடுமாறி வரும் நிலை நீடித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே அதே குழாயில் சுமார் 15 க்கும் மேற்பட்ட முறை உடைப்பு ஏற்பட்டு காவிரி குடிநீர் வீணாக சென்று வரும் நிலையில் தற்போது மீண்டும் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணானது மக்கனை வேதனைக்கு ஆளாக்கி உள்ளதுடன் குழாயை மாற்றி காவிரி குடிநீர் வீணாவதை தடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


-ஃபாரூக்,சிவகங்கை.


Comments