வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!!

     -MMH


     வெங்காயத்துடன் துத்தி இலை மற்றும் சிறு பருப்பைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். மூலச்சூடும் தணியும்.


வெங்காயத்தைச் சுட்டுச் சாப்பிட்டுவந்தால் இருமல்,கபக்கட்டு நீங்கும். வெங்காயத்தை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் கண், காது சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. வெங்காயத்தை வதக்கி, அரைத்து கொப்புளம், காயங் களில் தடவினால் அவை விரைவில் குணமாகும். வெங்காயச் சாற்றில் கடுகு எண்ணெய் கலந்து தடவி வந்தால் மூட்டு வலி நீங்கும். வெங்காயத்துடன் உப்பு சேர்த்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.


வெங்காயத்தைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் பனங்கற்கண்டைச் சேர்த்து, சட்டியில் போட்டு சிவக்க வறுத்துச் சாப்பிட்டால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.


-ஸ்டார் வெங்கட்.


Comments