காரைக்குடியில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது!

       -MMH


காரைக்குடியில் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றது.திருப்பத்தூர் எம்.எல்.ஏ சிறப்புரை.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கலைஞர் பவள விழா மாளிகையில் உள்ள பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கில் நடைபெற்ற மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


கூட்டத்தில் நவம்பர் 20 முதல் வாக்காளர் சேர்ப்பு முகாமில் சிறப்பாக மும்மராக நிர்வாகிகள் ஈடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சி மாவட்டக் கழக அவைத் தலைவர் திரு.வைத்தியநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக  மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


-பாரூக்,சிவகங்கை.


Comments