பொள்ளாச்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்!!

     -MMH


     பொள்ளாச்சி ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 
கண்காணிப்பாளர்  மணிவாசகம் தலைமையில்  நேற்று கொப்பரை ஏலம் விடப்பட்டது.  இதில் 201 பைகள் கொண்ட முதல் ரக கொப்பரை ஒரு கிலோ குறைந்த பட்சமாக 108.50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 108.80 ரூபாய் வரை ஏலம் போனது. 89 பைகள் கொண்ட இரண்டாம் ரக கொப்பரை ஒரு கிலோ குறைந்தபட்சமாக 70 ரூபாய் முதல் அதிகபட்சமாக 95.50 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 388 பைகள் 68 விவசாயிகள் கொண்டு வந்திருந்த நிலையில் 13 வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது இந்த வாரம் அதிக விலை கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வியாபாரி  ஒருவர் கூறுகையில் கடந்த வாரத்தை ஒப்பிடும்பொழுது இந்த வாரம் பருப்பு குறைவாகத்தான் வந்துள்ளது. விலையும் கொஞ்சம் உயர்ந்துள்ளது என்றார்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments