போத்தனூர் முக்கிய சாலையில் தேங்கும் மழை நீர் !! - நோய் பரவும் அபாயம்!!

        -MMH  


     போத்தனூர் சாய் நகர் அருகே புதிதாக உருவான குளம் மக்கள் அவதி


     நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக கோவை போத்தனூர் கடைவீதி பகுதியில் உள்ள எஸ்பிஐ பேங்க் அருகில் குளம் போல் காட்சியளிக்கும் மழைநீர்.கண்டு கொள்ளாத மாநகராட்சி விபத்து நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் கோவை மாவட்டம் போத்தனூர் பிரதான சாலையில் நேற்று பெய்த மழையினால் அடிக்கடி இந்த பகுதியில் தண்ணீர் தேங்குவதால் அங்கு வரும் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகிறார்கள்.இந்நிலையில் அங்கு தண்ணீர் தேங்குவதால் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணம் எடுப்பதற்காக வங்கி சம்பந்தமாக நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர் வந்த வண்ணம் உள்ளனர் இந்நிலையில் முதியவர்களும் பெண்களும் அதிக அளவில் வருவதால் நீர் தேக்கத்தால் அங்குமிங்கும் அல்லாடி கீழே விழும் நிலையும் இருக்கிறது‌.அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில்: "என் பெயர் மார்க்கண்டேயன் நான் எஸ்பிஐ வங்கியில் பணம் எடுக்க வந்துள்ளேன். இந்நிலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் தள்ளாடி கீழே விழும் நிலை எனக்கு இருக்கிறது. சற்று நிமிடத்தில் லாரி ஒன்று என் மீது மோதும் அபாயமும் ஏற்பட்டது. நொடியில் தப்பித்தேன் இதை மாநகராட்சி சரி செய்து கொடுக்காவிட்டால் விபத்துகள் உறுதியாக நேரிடும்", என்று  மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார்.


  


தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கிறது. அங்கு ஷோரூம்களும் மருந்தகம் மற்றும் எஸ்பிஐ வங்கி இருப்பதால் விபத்து நடை பெறுவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு அந்த தண்ணீரை அகற்றுமாறு அங்கு வரும் வாடிக்கையாளர்களும் வாகன ஓட்டிகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.


-ஈஷா,கோவை.


Comments