தண்ணீரில் மூழ்கி தத்தளித்த நண்பருக்கு கை கொடுத்தவர் பலி!! - பொள்ளாச்சியில் சோகம்!!

     -MMH 


     பொள்ளாச்சி அடுத்த வால்பாறை 'கூலங்கள் ஆற்றில்' சுற்றுலா வந்த திருப்பூரைச் சேர்ந்த 8 நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பகுதி குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும். இதை அறியாமல் நண்பர்கள் அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பொழுது   எதிர்பாராவிதமாக ஒருவர் தண்ணீரில் மாட்டிக்கொண்டு தத்தளித்தார். இதைக் கண்ட நண்பர்கள் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தனர் அப்பொழுது கூட இருந்த நண்பர்களில் ஒருவரான ஹரிஷ் அவருக்கு கைகொடுத்தார்.


தத்தளித்த நண்பர்  கரைக்கு மீண்டு வந்தார். கை கொடுத்தவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். நண்பனை காப்பாற்றிய நண்பன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் தேடியும் கிடைக்காததால் நண்பர்கள் தவித்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆறுதல் கூட சொல்ல முடியாமல் தவித்தனர்.


தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் உள்ள நீச்சல் வீரர் காளை என்பவரின் உதவியோடு உடலை கைப்பற்றி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.


நாளைய வரலாறு செய்திக்காக, 


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments