கம்பம் நகராட்சிக்கு புதிய ஆணையர்..!

     -MMH    🪔🪔🪔


கம்பம் நகராட்சி புதிய ஆணையராக எம். சரவணக்குமார் பொறுப்பு ஏற்பு:


கம்பம் நகராட்சிக்கு புதிய ஆணையராக எம்.சரவணக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.கடந்த 6 மாதங்களாக நகராட்சி ஆணையா் பணியிடம் காலியாக இருந்தது. பொறியாளா் இ.செல்வராணி பொறுப்பு ஆணையராக செயல்பட்டு வந்தாா்.


இதற்கிடையில் கம்பம் நகராட்சிக்கு புதிய ஆணையராக எம்.சரவணக்குமாரை நகராட்சிகளின் நிா்வாக இயக்குநரகம் வெள்ளிக்கிழமை நியமித்தது. அதன் படி புதிய ஆணையராக அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு, பொறியாளா் இ.செல்வராணி, சுகாதார அலுவலா் ஏ.அரசகுமாா், நகரமைப்பு அலுவலா் எம்.தங்கராஜ், மேலாளா் முனிராஜ் மற்றும் பணியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.


ஆணையா் எம்.சரவணக்குமாா் இதற்கு முன் சென்னையில் நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments