தங்கம் விலை குறைவு மக்கள் மகிழ்ச்சி!!

     -MMH


தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருவதால் நகை பிரியர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் இன்றும் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து உள்ளது.


கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொழில்கள் பலவற்றும் முடங்கியதால் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தில் தான் அதிகளவில் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை 39 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மக்கள் பலரும் நகை வாங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்தை சந்தித்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது.


இந்நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.4,752 என்றும், ஒரு சவரன் ரூ.38,016 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ.5,132 என்றும், ஒரு சவரன் ரூ.41,056 என்றும் விற்பனை செய்யப்படுகிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments