அரசு மருத்துவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

    -MMH


     இராமநாதபுரம் - நவ:3 


     புரோக்கர்கள் மூலம் அரசு மருத்துவமனை நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு இழுக்கும் அரசு மருத்துவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்!


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் உள் நோயாளிகளை புரோக்கர்கள் மூலம் ஆள் பிடித்து, தங்களால் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அதிக பணம் பறிப்பதாக குற்றச்சாட்டு கூறி, அரசு மருத்துவர்களை கண்டித்தும் மருத்துவமணை நிர்வாகத்தை கண்டித்தும் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஆக இருப்பதாகவும் செவிலியர்கள் போதிய அளவில் இல்லை எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மருத்துவர்களே தெரிந்த ஏஜென்ட்கள் மூலமாக தங்கள் சொந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.


மேலும்  அழைத்து செல்லும் ஏஜென்ட்களுக்கு ரூபாய் 3000 வழங்கப்படுகிறது மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லும் ஓட்டுனர்களுக்கு ரூபாய் 500 வழங்கப்படுகிறது என்றும், மேலும் மருந்துகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.


தொடர்ந்து  அரசு தலைமை மருத்துவமனையில் நடக்கும் இந்த சீர்கேட்டை கண்காணிக்க சிறப்பு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன்பாக சிஐடியூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


-ஃபாரூக்,சிவகங்கை.


Comments