உதவும் இதயங்கள் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்!

    -MMH


சிங்கம்புணரியில் ‘உதவும் இதயங்கள்’ அறக்கட்டளை சார்பாக நலிவுற்ற ஏழை-எளிய, சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ‘உதவும் இதயங்கள்’ அறக்கட்டளை சார்பாக நலிவுற்ற ஏழை-எளிய. சாலையோரம் வசிக்கும் மக்கள் 18 பேருக்கு சேவுகமூர்த்தி கோவில் முன்புறம் வைத்து இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உதவும் இதயங்கள் அறக்கட்டளை மாநிலத் தலைவர் மற்றும் நிறுவனர் ரோகிணி விஜயகுமார், மாநில ஆலோசகர் செய்தியாளர் சுதாகர், மாநில திட்ட இயக்குனர் தேவிகா மற்றும் குழு உறுப்பினர்கள், சிங்கம்புணரி உதவும் கரங்கள் அமைப்பு மற்றும் சிங்கம்புணரி VMI விஜய் மக்கள் இயக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


-பாரூக்,சிவகங்கை.


Comments