பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!! - வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தகவல்!!

     -MMH 


     பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தகவல்!


     பொள்ளாச்சி: வடக்கு கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் வருகின்ற 14 ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்யும். குறைந்த பட்சமாக 1 மில்லி மீட்டர் அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மேலும் பொள்ளாச்சி தெற்கு பகுதிகளிலும் இதே நிலை காணப்படும். குறிப்பாக ஆனைமலை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 34.5 மில்லி மீட்டர் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்று 21 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் விவசாயிகள் விவசாய நிலங்களில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்தி பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு. 


Comments