தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி கோவில்களில் குவியும் மக்கள்....!

    -MMH     🪔🪔🪔


தீப ஒளி திருநாளான இன்று தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் கொண்டு, வெந்நீரில் குளித்து  பின்னர் புத்தாடை உடுத்தி ஆலயத்திற்கு சென்று இறைவனை வழிபடுவர்.அதன் படி பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி  மக்கள் மக்கள் இன்று அதிகாலை முதலே பொள்ளாச்சில் மிகவும் பிரதிக்தி பெற்ற கோவில்களான பொள்ளாச்சி மாரியம்மன் கோவில்,பொள்ளாச்சி அய்யப்ப சுவாமி கோவில்,கருப்பராயன் கோவில்,சுப்ரமணியசுவாமி கோவில்,
மஹாலட்சுமி கோவில்,ராமர் கோவில்,
சக்திவிநாயகர் கோவில்,
பெருமாள் கோவில் ,
ஆனைமலை மாசாணியம்மன் கோவில்,ஆஞ்சநேயர் கோவில் போன்ற ஆலயங்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். 


மேலும் தீபாவளிக்கு பக்தர் வருகையை ஒட்டி பல்வேறு சிறப்பு பூஜைகளும் , வழிபாடுகளும் செய்யப்பட்டதோடு  பக்தர்கள் கொரோன முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளையும் கோவில் நிர்வாகங்கள் முறையாக கடைபிடித்துவருவது அனைவரையும் மகிழ்ச்சியடையவைத்துள்ளது என்றே கூறவேண்டும்.


நாளைய வரலாறு செய்திகளுக்காக,


-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.


Comments