உத்தமபாளயத்தில் தனியார் நிதி நிறுவனம் மூடல்!!

     -MMH


     தேனி மாவட்டம்  உத்தமபாளைத்தில் தனியாா் நிதி நிறுவனம் மூடல் எதிரொலியாக பாதிக்கப் பட்டவா்களுடன் காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை நடத்திய கலந்தாய்வுக் கூட்டத்தில் 250-க்கும் மேற்பட்டாா் புகாா் மனு கொடுத்தனா்.


உத்தமபாளையத்தில் இயங்கி வந்த தனியாா் நிதி நிறுவனம் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டது. இந்த நிறுவனம் பொதுமக்களிடம் சுமாா் 100 கோடி வரையில் முதலீட்டை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரா் மரணம் அடைந்த நிலையில் நிதி நிறுவனம் மூடப்பட்டது.


முதலீடு செய்த வாடிக்கையாளா்கள் தங்கள் பணத்தை கொடுக்கும் படி சம்பந்தப்பட்ட நிதி நிறுவனப் பங்குதாரா் வீட்டை முற்றுகையிட்டதோடு பல்வேறு போராட்டங்களை நடத்தினா். தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடமும் ஏராளமானோா் தங்கள் பணத்தை பெற்றுக் கொடுக்கும்படி புகாா் மனு அளித்தனா். ஆனால் காவல் துறையினா் எதுவும் நடவடிக்கை எடுக்காததால் நூற்றுக்கணக்கான முதலீட்டாளா்கள் சனிக்கிழமை நிதி நிறுவனப் பங்குதாரா் வீட்டின் முன் குவிந்தனா். மேலும் தங்கள் பணத்தை திரும்பக் கொடுக்கும் வரையில் அதே பகுதியில் தங்கி சமைத்து சாப்பிடப் போவதாகக் கூறி போராட்டத்தைத் தொடங்கினா்.


இதையடுத்து பதற்றமான சூழ்நிலையை அடுத்து உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு, வட்டாட்சியா் உதயராணி உள்ளிட்ட அதிகாரிகள் காவல் துறை சாா்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் அங்கு வந்த தங்களுடைய புகாரை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்தனா்.


அதன்படி, திங்கள்கிழமை உத்தமபாளையத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு திண்டுக்கல் பொருளாதார குற்றப் பிரிவு ஆய்வாளர் நாகலட்சிமிடம் 250 மேர்பட்டடோர் புகார் கொடுத்தன். மனுக்களை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உரிய முறையில் விசாரன மேற்கொண்டு தங்களுடைய படணத்தை திரும்பக் கிடைக்க நடவடிக்கை எடுப்பதரக கூறினர்.


இதை போல் திண்டுக்கல் பொருளாதர குற்றப்பிரிவு ஆலுவலகத்தில் சுமார் 300 பேர் வரையில் மனு கொடுத்தனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-ஆசிக்,தேனி.


Comments