தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!!

     -MMH


தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் அறிவிப்பு!!


     தீபாவளிப் பண்டிகையன்று பொது இடங்களில் குறிப்பிட்ட 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் பசுமைப் பட்டாசுகளை காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் வெடிக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரமானது காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணிமுதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். 


மேலும், தமிழக மக்கள் அனைவரும் மாசில்லா தீபாவளியைக் கொண்டாடும்படி அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் பட்டாசு வெடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


-இராஜசேகரன்,தஞ்சாவூர்.


Comments