அமெரிக்க ஜனாதிபதியின் சம்பளம் தெரியுமா....!

            -MMH


அமெரிக்க ஜனாதிபதி என்ற மதிப்பு மிக்க பட்டம் மட்டுமின்றி, அந்த பொறுப்புக்கு வரும் நபர் முறையான ஊதியத்திற்கும் மேற்பட்டு 17 நியாயமான ஆதாயங்களை பெறுகிறார்.


அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். எதிர்வரும் ஜனவரி 20 ஆம் தேதி அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்கிறார்.


இந்த நிலையில் அவரது ஆண்டு ஊதியம் மற்றும், ஜனாதிபதவியில் இருக்கும் போதும், அதன் பின்னரும் கிடைக்கவிருக்கும் ஆதாயம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் ஒருவருக்கு ஆண்டுக்கு 400,000 டாலர் ஊதியமாக வழங்கப்படும்.


அவர் பதவி காலம் முடிந்த பிறகும், அவருக்கு குறிப்பிட்ட ஒரு ஊதியம் வழங்கப்படும்.
மட்டுமின்றி, அமெரிக்க ஜனாதிபதிக்கு ஊதியம் போக, இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு 50,000 டாலர் வழங்கப்படும்.


மேலும், பயணச்சலுகை என 100,000 டாலர் மதிப்பிலான கணக்கு ஒன்று துவங்கப்படும். அத்துடன் பொழுதுபோக்கு செலவீனம் என ஆண்டுக்கு 19,000 டாலர் வழங்கப்படும்.


மட்டுமின்றி, ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போதும், பொறுப்பில் இருந்து விலகிய பின்னரும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.


வெள்ளை மாளிகையில் குடியேறிய பின்னர், தேவையான மாறுதல்களை ஏற்படுத்திக்கொள்ள ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்திற்கு 100,000 டாலர் வழங்கப்படும்.


ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த தொகையை பயன்படுத்த மறுத்ததுடன், தங்களின் சொந்த பணத்தில் தேவையான மாற்றங்களை செய்துள்ளனர்.


ஆனால் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த வகையில் 1.75 மில்லியன் டாலர் அரசு பணம் செலவிட்டதாக கூறப்படுகிறது.


ஆறு தளங்கள் கொண்ட வெள்ளை மாளிகையில் அனைத்து வசதிகளும் கொண்ட மொத்தம் 132 அறைகள் உள்ளன.


இங்கு, ஜனாதிபதி குடும்பம் மட்டுமின்றி, உதவியாளர்கள், சமையற்கலைஞர்கள் உள்ளிட்ட 100 பேர் நிரந்தரமாக தங்கி வருகின்றனர்.


இவர்களின் ஊதியம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் என ஆண்டுக்கு 4 மில்லியன் டாலர் ஒதுக்கப்படுகிறது.


இது மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களின் வாழ்நாள் வரை ஆண்டுக்கு 200,000 டாலருக்கும் அதிகமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.


அத்துடன் மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.


-ஸ்டார் வெங்கட்.


Comments