தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு!! - வானிலை ஆய்வு மையம்.

   -MMH 

நிவர் தமிழக மக்களை அச்சுறுத்தி ஓய்ந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது புயலாக மாறி, வரும் 2-ம் தேதி இலங்கையில் கரையை கடக்கும். பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் டிச.1 முதல் 4-ம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.தென்மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-ஸ்டார் வெங்கட்.

Comments